/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
/
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
ADDED : ஆக 12, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர தினத்தன்று, சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடத்தப்படுகிறது.
அவ்வகையில், நேற்று, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் செய்யப்பட்டது. மாலையில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவீதி உலா விழாவும் இடம்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.