/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
/
இயற்கை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
ADDED : ஜூலை 31, 2024 02:42 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, இயற்கை விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தோட்டக்கலைத்துறை சார்பில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் விழா, ஜலத்துார் பொன்னுாஞ்சல் அங்கக விவசாய பண்ணையில் நடந்தது.
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 30 பேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், 3.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான அங்கக பயிற்சிக்கு தேவையான இரும்பு பொருட்கள், மண்புழு, படுக்கை, பேரல் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். அதில், குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

