/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்கள்; வசந்தராஜன் பிரசாரம்
/
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்கள்; வசந்தராஜன் பிரசாரம்
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்கள்; வசந்தராஜன் பிரசாரம்
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்கள்; வசந்தராஜன் பிரசாரம்
UPDATED : ஏப் 13, 2024 04:55 AM
ADDED : ஏப் 13, 2024 12:30 AM

போத்தனூர்;பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியிலுள்ள கோவைபுதூர், குளத்துபாளையம், இடையர்பாளையம், ரைஸ்மில் ரோடு, வெற்றிலைக்கார வீதி பகுதிகளில், நேற்று பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, வசந்தராஜன் பேசியதாவது:
தற்போது நடக்கும் தேர்தல், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு நடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடம் பிரதமர் யார் என கேட்டால், பதில் கிடையாது.
கடந்த 10 ஆண்டுகாலமாக ஊழலற்ற இந்தியாவை கொடுத்தவர் பிரதமர் மோடி. முன்பு இந்தியா என்றால், ஊழல் நாடு என உலக நாடுகள் தூற்றும்.
இன்று நாம் உயிரோடு இருக்க காரணம், மோடி இலவசமாக போட்ட கொரோனா தடுப்பூசி தான். அது போல், 13 நாட்டு மக்களை காப்பாற்றினார். நிலவின் தென் துருவம், சூரியனுக்கும் விண்கலம் அனுப்பியது நாம்தான்.
ரஷ்யா -- உக்ரைன் போரை நிறுத்தி, 23 ஆயிரம் மாணவர்களை காப்பாற்றியது மோடி. வீடு கட்ட, கழிவறை கட்ட, குடிநீர் வசதிக்கும் மோடிதான் காரணம். நமக்கு சேரவேண்டியதை ஊழலின்றி கொடுக்க, வங்கி கணக்கு துவங்கினார். இதையே, தி.மு.க.,-- அ.தி.மு.க., செய்திருந்தால், முக்கால்வாசி பணம் ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் போய் இருக்கும்.
டிரைவர் இல்லாத பஸ்சில், நாம் ஏறமாட்டோம். அதுபோல் பிரதமர் வேட்பாளர் இல்லாத கட்சிகளுக்கு ஓட்டு போடுவதா? லோக்சபாவில் மக்கள் பிரச்னையை பேசாமல், டீ, மிக்சர் சாப்பிட சென்றவர்களால் என்ன பயன்?
தற்போது தமிழ்நாட்டில் புரட்சி வந்துள்ளது. பா.ஜ.,விற்கு வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்காக உழைக்க, குறைகளை கேட்க, கோரிக்கைகள் நிறைவேற ஒரு முறை தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.

