/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரும்புக்கடை பகுதியில் 'இனிக்கிறது' வாசிப்பு!
/
கரும்புக்கடை பகுதியில் 'இனிக்கிறது' வாசிப்பு!
ADDED : ஜூன் 02, 2024 12:07 AM

கோவை ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் 'புர்கான்' என்ற பெயரில் புதிய நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நுாலகத்தில் தமிழ், ஆங்கிலம் உருது ஆகிய மொழிகளில் இஸ்லாமிய நுால்கள், பொது நுால்கள், சிறுவர்களுக்கான நுால்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நுால்கள் உள்ளன.
தினமும் காலை, 10:00 முதல் பகல் 1:00 மணி வரை பெண்களுக்கும், மதியம் 1:00 முதல் 4:30 மணி வரை பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கும், மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை, பொது மக்களுக்காகவும், இந்த நுாலகம் செயல்படுகிறது.
கோவை ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் ஹக்கீம் கூறுகையில், '' கரும்புக்கடை மற்றும் சாரமேடு பகுதியில், புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ள, பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் வாசிப்பு தாகத்தை போக்க, இங்கு ஒரு நுாலகம் வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், செய்து கொடுக்கவில்லை.
அதனால் நாங்களே எங்கள் அமைப்புசார்பில், இந்த நுாலகத்தை துவக்கி இருக்கிறோம். சிவில் சர்வீசஸ், வங்கி, ரயில்வே மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களை, ஊக்கப்படுத்தவும், அவர்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெறவும் இந்த நுாலகம் உதவும் என நம்புகிறோம்,''என்றார்.

