/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் நீச்சல் பயிற்சி முகாம்
/
பாரதியார் பல்கலையில் நீச்சல் பயிற்சி முகாம்
ADDED : மே 01, 2024 12:57 AM

கோவை:மருதமலை ரோடு பாரதியார் பல்கலையில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில், பாரதியார் பல்கலை சார்பில் நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான முகாம் ஏப்., முதல் வாரத்தில் துவங்கி, மே மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.
தினமும் காலை, 6:30 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை, 4:30 முதல் 6:30 மணி வரை என, இரு பிரிவுகளில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தற்போது 350க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். நீச்சல் தெரிந்தவர்கள் காலை, 10:00 மாலை 3:00 மணி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோர், 83443 88187, 95858 46243, 96774 48144 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது.