/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாதித்து காண்பிக்க தபிதா தயார்... சைக்கிள் வழங்க யார் முன்வருவார்?
/
சாதித்து காண்பிக்க தபிதா தயார்... சைக்கிள் வழங்க யார் முன்வருவார்?
சாதித்து காண்பிக்க தபிதா தயார்... சைக்கிள் வழங்க யார் முன்வருவார்?
சாதித்து காண்பிக்க தபிதா தயார்... சைக்கிள் வழங்க யார் முன்வருவார்?
ADDED : மே 26, 2024 12:32 AM

மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தபிதா, சிறு வயதில் சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று வென்ற உத்வேகத்துடன், டிராக் மற்றும் ரோடு சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.
போட்டிகளில் பங்கேற்பு மட்டுமின்றி, 2022ம் ஆண்டு முதல், தேசிய டிராக் சைக்கிளிங், தேசிய ரோடு சைக்கிளிங், தமிழ்நாடு சைக்கிளிங் லீக், எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய சைக்கிளிங் போட்டிகள் என பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளார்.
அடுத்த கட்டத்துக்கு செல்ல, சைக்கிள் ஒரு தடையாக அமைந்து விட்டது. சைக்கிளிங் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சைக்கிள் விலை, அரசு பள்ளி மாணவியால் வாங்க முடியாத அளவில் இருப்பதால், தற்போது மாணவியின் சாதனை பயணம் பாதியில் நிற்கிறது.
மாணவி தபிதா கூறுகையில், ''சைக்கிளிங் எனக்கு மிகவும் பிடித்த பயிற்சி. தற்போது வரை பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளேன். தற்போது, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, சரியான சைக்கிள் பயன்படுத்தினால், நன்கு 'பெர்பார்ம்' செய்ய முடியும்,'' என்றார்.
திறமை இருந்தும், தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றும், பணம் இல்லாததால் இவரது சாதனை பயணம், பாதியில் நிற்கிறது. தபிதாவின் தாய் சாதாரண கூலித்தொழிலாளி என்பதால், உயர்தர சைக்கிள் வாங்க வசதி இல்லை.
தனிமனிதர்கள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மாணவிக்கு உதவ முன் வந்தால், தபிதா சர்வதேச தளத்தில் தன் திறமையை வெளிகாட்டுவார்.
உதவ விரும்புவோர், 88073 81186 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.