/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை சோறு எடுத்து கோவிலில் வழிபாடு
/
மழை சோறு எடுத்து கோவிலில் வழிபாடு
ADDED : மே 09, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு, நல்லியன்குட்டைபுதூரில் உள்ள விநாயகர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு, நல்லியன்குட்டைபுதுாரில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதி மக்கள், மழை வேண்டி, விநாயகரை சுற்றி சுவர் போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் தண்ணீர் நிரப்பி மூலவரை மூழ்க வைத்து வழிபட்டனர்.
மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குளம், குட்டை, தடுப்பணைகளில் நீர் நிரம்ப வேண்டியும், சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஊர் பொதுமக்கள் அனைவரும் மழை சோறு எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டு சாப்பிட்டனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.