/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
/
காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜூலை 24, 2024 11:51 PM

தொண்டாமுத்தூர் : கோவையில், 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, காஷ்மீருக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த, 17 வயது சிறுமி, துணிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 13ம் தேதி, வழக்கம் போல வேலைக்கு சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் பேரூர் போலீசில் புகார் அளித்தனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது, சிறுமி இதற்கு முன் வேலை செய்த துணிக்கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ்,23 என்பவர், சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்ததும், சிறுமி காணாமல் போனதில் இருந்து, முகமது அயாசு மாயமாகி இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, வாலிபரின் பெற்றோரும் கரும்புக்கடை போலீசில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வாலிபரும், சிறுமியும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகரில், அறை எடுத்து தங்கி இருந்தபோது, காஷ்மீர் போலீசார் சோதனை செய்து பிடித்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் போலீசார், கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரூர் போலீசார் காஷ்மீர் சென்று, வாலிபரையும், சிறுமியையும் மீட்டு விமானம் மூலம் நேற்று கோவை வந்தனர். சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், முகமது அயாஸ், சிறுமியை காதலிப்பதாக கூறி ஓராண்டாக பழகி வந்ததும், தனக்கு தன் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி, முகமது அயாஸ், கடந்த 13ம் தேதி சிறுமியை அழைத்துக் கொண்டு, காஷ்மீர் சென்றுள்ளார்.
அங்கு, அறை எடுத்து தங்கி, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது.
பேரூர் அனைத்து மகளிர் போலீசார், கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, முகமது அயாஸை கைது செய்தனர்.