/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜா பிரசாரத்தில் 'தள்ளு முள்ளு'
/
ராஜா பிரசாரத்தில் 'தள்ளு முள்ளு'
ADDED : ஏப் 07, 2024 10:54 PM

கூடலுாரில் எம்.பி., ராஜா பிரசாரத்தில் மகளிர் அணியினர் இடையே, 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி லோக்சபா தொகுதி கூடலூர், தேவர்சோலை பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம் மேற்கொண்டார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
கூடலூர் தேவர்சோலை இரண்டாவது மைல் பகுதியில் எம்.பி., ராஜா பிரசாரத்துக்கு வருவதற்கு முன், தி.மு.க., மகளிர் அணியினர், இரு பிரிவாக காத்திருந்தனர். அப்போது, மகளிர் அணியின் இரு கோஷ்டியினர் இடையே, 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த கட்சி நிர்வாகிகள். அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து இரு பிரிவினரையும் தனித்தனியாக நிற்க வைத்தனர். இச்சம்பவம் கட்சியினர், கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

