/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போய் விட்டது: நடிகர் ரஞ்சித்
/
தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போய் விட்டது: நடிகர் ரஞ்சித்
தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போய் விட்டது: நடிகர் ரஞ்சித்
தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போய் விட்டது: நடிகர் ரஞ்சித்
ADDED : ஆக 10, 2024 11:49 PM

கோவை:நடிகர் ரஞ்சித் நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம், நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படம் குறித்து, நடிகர் ரஞ்சித் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. நான் இந்த படத்தில், நாடக காதல் பற்றியும் சொல்லி இருக்கிறேன். நல்ல காதல் பற்றியும் சொல்லி இருக்கிறேன்.
சமூக வலைதளங்களில் என்னை பற்றி, தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர். நான் ஆணவக்கொலைக்கு ஆதரவானவன் என்பது போல், என் மேல் விமர்சனம் வைக்கப்படுகிறது. நிச்சயமாக எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை.
பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின், மன வேதனையை இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன். கவுண்டம்பாளையம் திரைப்படம் சாதிப்படமல்ல.
இவ்வாறு, அவர் கூறினார்.