/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய திசையில் பயணிக்கிறது தமிழ் சினிமா: கவிஞர் ஆனந்தன்
/
புதிய திசையில் பயணிக்கிறது தமிழ் சினிமா: கவிஞர் ஆனந்தன்
புதிய திசையில் பயணிக்கிறது தமிழ் சினிமா: கவிஞர் ஆனந்தன்
புதிய திசையில் பயணிக்கிறது தமிழ் சினிமா: கவிஞர் ஆனந்தன்
ADDED : செப் 02, 2024 01:11 AM

கோவை;கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், புதிய நுால்கள் மற்றும் திரைப்பட விமர்சன கூட்டம், தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கவிஞர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் குறித்து கவிஞர் ஆனந்தன் பேசியதாவது:
சமீபத்தில் தமிழில் 'தங்கலான்', 'வாழை', 'கொட்டுக்காளி', 'போகுமிடம் வெகு துாரமில்லை' போன்ற திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. இந்த படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகளையும், மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இயக்குனர் மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம், தமிழ் சினிமாவின் கதைக்களத்தை புதிய திசையில் பயணிக்க வைத்துள்ளது.
துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விவசாய கூலிகளாக வாழும் மக்கள் படும் துயரத்தையும், இரண்டு ரூபாய் கூலிக்காக, வாழைக்காய் சுமக்கும் பள்ளி சிறுவர்களின் வறுமை நிலையையும், வாழை படம் மிகவும் உருக்கமாக சித்தரிக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.