/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரம்பரிய தற்காப்பு கலைகளை உலகத்தர விளையாட்டாக்க வேண்டும் தமிழ்நாடு அடிமுறை சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 05, 2024 12:14 AM
கோவை:'தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான 'அடிமுறை'யை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று, உலக தரத்தில் விளையாட்டாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு அடிமுறை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சட்டசபை கூட்டத் தொடரில், பாரம்பரிய தற்காப்பு கலைகளை ஊக்குவிக்கும் விதமாக, கன்னியாகுமரியில், களரி, அடிமுறை, சிலம்பம், வர்மம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக மையம் அமைக்கப்படும் என, அமைச்சர் உதயநிதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக, தமிழ்நாடு அடிமுறை சங்கம், இந்திய வர்ம அடிமறை சம்மேளனம் மற்றும் உலக அடிமுறை சம்மேளனம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அடிமுறை சங்க தலைவர் செல்வராஜ் ஆசான் கூறியதாவது:
பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதியின் அறிவிப்பு, மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளை, உலக தரத்தில், சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக வளர்த்தும். தென்கொரியா நாட்டின் தெக்குவண்டோ, ஜப்பான் நாட்டின் கராத்தே மற்றும் ஜூடோ, சீன நாட்டின் உஷூ போன்றவை உலகமெங்கும் பரவி ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளாகவும் உள்ளது.
அதே போன்று, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறை கலையை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று, உலக தரத்தில் விளையாட்டாக கொண்டு செல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உதவ வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.