/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக பெண்கள் கிரிக்கெட் அணி தேர்வு ஜூன் 3ல் துவக்கம்
/
தமிழக பெண்கள் கிரிக்கெட் அணி தேர்வு ஜூன் 3ல் துவக்கம்
தமிழக பெண்கள் கிரிக்கெட் அணி தேர்வு ஜூன் 3ல் துவக்கம்
தமிழக பெண்கள் கிரிக்கெட் அணி தேர்வு ஜூன் 3ல் துவக்கம்
ADDED : மே 30, 2024 05:00 AM
கோவை : தமிழக பெண்கள் கிரிக்கெட் அணிக்கான ஓபன் தேர்வு ஜூன், 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது, 15 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, மாநில அளவில் ஓபன் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு ஜூன், 3ம் தேதி சென்னை, எம்.ஏ.சி., 'பி' கிரிக்கெட் 'நெட்ஸ்'ல் நடக்கிறது. இதில் 2009ம் ஆண்டு செப்., 1ம் தேதி முதல் 2012ம் ஆண்டு ஆக.,31க்கு இடையே பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
இதேபோல், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு ஜூன், 4ம் தேதி சென்னை எம்.ஏ.சி., 'பி' கிரிக்கெட் 'நெட்ஸ்'ல் நடக்கிறது.
இதில் 2005ம் ஆண்டு செப்., 1ம் தேதி முதல் 2009ம் ஆண்டு ஆக.,31க்கும் பிறந்த பெண்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் வீராங்கனைகள், www.tnca.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.