/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமூக நலத்துறை சார்பில் தமிழ் புதல்வன் திட்ட பயிற்சி
/
சமூக நலத்துறை சார்பில் தமிழ் புதல்வன் திட்ட பயிற்சி
சமூக நலத்துறை சார்பில் தமிழ் புதல்வன் திட்ட பயிற்சி
சமூக நலத்துறை சார்பில் தமிழ் புதல்வன் திட்ட பயிற்சி
ADDED : ஆக 01, 2024 01:16 AM
கோவை : கோவை மாவட்ட சமூகநலத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவிகளுக்கு, உயர்கல்வியில் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் 8 ம் வகுப்பு வரை படித்து பின்னர், அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பிளஸ்2 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நடப்பாண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட சமூகநலத்துறை சார்பில், இத்திட்டத்தின் கீழ் செயல்படவுள்ள கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.