/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழை கட்டாய பாடமொழியாக்க வேண்டும்'
/
'தமிழை கட்டாய பாடமொழியாக்க வேண்டும்'
ADDED : மார் 11, 2025 04:01 AM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய நீதி கட்சிமாநில தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மும்மொழி கல்வி கொள்கையில் மத்திய அரசு, மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்லவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யாமல், மாணவர்கள் விரும்புகின்ற மொழியை படிக்க அனுமதிக்க வேண்டும்.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென் மாநிலங்களில்
உறுப்பினர்களை குறைக்க மாட்டோம் என பிரதமர் கூறிய பிறகும், தமிழக அரசு அதனை பெரிதுப்படுத்துவது, தேவையில்லாத ஒன்று. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமொழியாக்க வேண்டும். அப்போது தான் தமிழ் வளரும். வரும் சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.,வுடனான கூட்டணியே புதிய நீதி கட்சி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.--