/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் பாடத்தேர்வு மிக எளிது: பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
/
தமிழ் பாடத்தேர்வு மிக எளிது: பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ் பாடத்தேர்வு மிக எளிது: பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ் பாடத்தேர்வு மிக எளிது: பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 04, 2025 12:24 AM

அன்னுார:
பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடம் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. நேற்று தமிழ் பாட தேர்வு நடந்தது. அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், சொக்கம்பாளையம் ஆனையூர், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியர், அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்களில் நேற்று தேர்வு எழுதினர்.
அதிக மதிப்பெண் பெற முடியும். தாரணி, அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னுார்.
ஒரு மதிப்பெண்ணில் 14 கேள்விகளும், இரண்டு மதிப்பெண்களில் 12 கேள்விகளும், நான்கு மதிப்பெண்களில் ஏழு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. அனைத்தும் எளிதாக இருந்தன. மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
யோசித்து எழுதும் படி இருந்தது நர்மதா, அன்னுார்.
இரண்டு, நான்கு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆறு மதிப்பெண் கேள்விகள் மிகவும் யோசித்து எழுதும்படி கேட்கப்பட்டிருந்தன.
ஒரு மதிப்பெண் கேள்வி கடினம் நவீன், மூக்கனுார்.
ஒரு மதிப்பெண் கேள்விகள் 14 கேட்கப்பட்டிருந்தன.
இவை சற்று கடினமாக இருந்தன. இரண்டு, நான்கு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. சென்னையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களைப் பற்றி எழுதும்படி கேட்டது புதிதாக இருந்தது.