/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல்., கூடைப்பந்து போட்டியில் 'வெற்றி வாகை' சூடியது தமிழ்நாடு அணி
/
பி.எஸ்.என்.எல்., கூடைப்பந்து போட்டியில் 'வெற்றி வாகை' சூடியது தமிழ்நாடு அணி
பி.எஸ்.என்.எல்., கூடைப்பந்து போட்டியில் 'வெற்றி வாகை' சூடியது தமிழ்நாடு அணி
பி.எஸ்.என்.எல்., கூடைப்பந்து போட்டியில் 'வெற்றி வாகை' சூடியது தமிழ்நாடு அணி
ADDED : ஆக 25, 2024 10:07 PM
கோவை:பி.எஸ்.என்.எல்., கூடைப்பந்து போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு அணி, 68க்கு, 50 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவை வென்று, வெற்றி வாகை சூடியது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, 20வது அனைத்திந்திய பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டிகள் கடந்த, 21 முதல், 23ம் தேதி வரை நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடந்தன.
தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் சார்பில் நடந்த இப்போட்டியில், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றன. நாடு முழுவதும் இருந்து, 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
ஆரம்பம் முதலே தமிழ்நாடு அணி மூன்று பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கூடைப்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி, ஒடிசா அணியை, 68க்கு 50 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில், கேரளா அணி, கர்நாடக அணியை, 80க்கு, 68 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
கைப்பந்து போட்டியில் கர்நாடக அணி, தமிழ்நாடு அணியை 3-0 என்ற செட்களில் வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ராஜஸ்தான் அணி, ஹிமாச்சல பிரதேச அணியை, 2-0 என்ற செட்களில் வென்றது.
பஞ்சாபை சேர்ந்த ராஜீவ் கபூருக்கும், ஒடிசாவை சேர்ந்த தாஸ் அதிகரிக்கும் இடையேயான டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ராஜீவ் கபூர் வென்றார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஸ்ரீ வஸ்தவா மற்றும் ராஜீவ் கபூர்க்கும், ஒடிசாவை சேர்ந்த சோரன் மற்றும் தாஸ் அணிக்கும் இடையில் நடந்த, ஆண்களுக்கான இரட்டையர் இறுதி போட்டியில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் யாதவுக்கும், பஞ்சாப்பை சேர்ந்த தஜிந்தர் சிங்கிற்கும் இடையே நடந்த, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், தினேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத்து வெங்கடேஷ்வரலு பரிசு வழங்கினார்.

