ADDED : மே 15, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
கோவை: டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்த ஊழியர்களுக்கு, அரசின் பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் வேலை வழங்க வலியுறுத்தி, கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தில் 69 கடைகள் மூடப்பட்டதால், 300- பேர் வேலை இழந்துள்ளனர். அவர்களை பிற துறைகளில் நியமிக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
