ADDED : ஜூலை 15, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
கோவை: காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை டாடாபாத் அருகே நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
