ADDED : மே 17, 2026 09:52 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. பஸ் ஸ்டாண்டில் இருந்து உழவர் சந்தை செல்லும் வழியில், ஒரு டாஸ்மாக் கடையும், அண்ணாஜி ராவ் சாலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில், ஒரே இடத்தில் மூன்று டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வந்தன. நள்ளிரவில் மது குடிக்கும் சிலர், உழவர் சந்தை செல்லும் வழியிலும், பஸ் ஸ்டாண்டிலும் போதையில், அலங்கோலமாக படுத்து கிடப்பர். காலை, 5:00 மணிக்கு பஸ்சில் இருந்து காய்கறி மூட்டைகளை இறக்கி உழவர் சந்தைக்கு எடுத்து வரும் போது, போதையில் படுத்து இருப்பவர்களால், விவசாயிகள் அவதிபட்டுள்ளனர்.
தமிழக அரசு உத்தரவால், பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்ட உழவர் சந்தை செல்லும் வழியில் இருந்த கடை உள்பட, நான்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் உழவர் சந்தை செல்லும் விவசாயிகள், பொது மக்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
