/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழை பொழிவால் துளிர்விடும் தேயிலை
/
பருவமழை பொழிவால் துளிர்விடும் தேயிலை
ADDED : ஆக 07, 2024 10:51 PM

வால்பாறை : வால்பாறையில், பருவமழைக்கு பின், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிப்பதால், தேயிலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில், 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்வதால் தேயிலை செடிகள் துளிர்விட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்து இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பெய்த கனமழையினால், தேயிலைக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதால், உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதனிடையே தேயிலை செடிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை செடிகளுக்கு கவாத்து பணி சில எஸ்டேட்களில் நடக்கிறது. கவாத்து வெட்டிய பின், 90 நாளில் மீண்டும் தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கும். அதன் பின் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு, கூறினர்.