/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நேர்மறையான எண்ணங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்' பெற்றோருக்கு அறிவுரை

ADDED : ஆக 29, 2024 02:51 AM

கூடலுார் : 'பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களை கற்று கொடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
கூடலுார் புளியம்பாறை ஊராட்சி துவக்கப் பள்ளியில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம், 'சைல்ட் பண்ட்' அமைப்பு சார்பில், பெற்றோருக்கு திறன் மேம்பாட்டு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் விஜயா தலைமை வகித்து பேசுகையில், ''பெற்றோர் மாணவ பருவத்தில் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுடன் அன்போடு பழகி நேர்மறையான விஷயங்களை கற்று கொடுக்க வேண்டும்.
''அவர்களை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவதுடன், பள்ளியில் அன்றாடும் கற்று கொள்ளும் விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
''அடிக்கடி, ஆசிரியரை சந்தித்து தன் குழந்தையின் படிப்பு குறித்து கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் குழந்தையின் வாழ்வு மேம்படும்,'' என்றார்.
களப்பணியாளர் யோகேஸ்வரி பேசுகையில், ''குழந்தைகளுக்கு தேவையான நேரத்தில், சரியான உணவுகளை வழங்க வேண்டும்.
''குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்பட்டால், டாக்டரிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது அவசியம். டாக்டர் பரிந்துரை இன்றி, குழந்தைகளுக்கு மருந்து வழங்க கூடாது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.