/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிக்கு செல்லும் வழியில் லாரி மோதி ஆசிரியை பலி; டிப்பர் லாரிகளால் மக்கள் 'திக்...திக்...'

ADDED : ஜூன் 27, 2024 06:11 AM

கோவை : உக்கடம் அருகே டிப்பர் லாரி மோதி, பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வால், கனரக வாகனங்களுக்கான தடை நேரத்தை முன்கூட்ட கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாநகரில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கைக்கேற்ப, சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதிவேகம், சாலை விதிகளை மதிக்காதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவையே, உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், உக்கடம் அருகே டூ வீலரில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை அனிதா,45, நேற்று டிப்பர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரத்தினபுரியை சேர்ந்த இவர், குனியமுத்துாரில் உள்ள நிர்மல மாதா பள்ளிக்கு நேற்று காலை, 7:45 மணிக்கு, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி சென்றுள்ளார்.
லாரி பேட்டை பெட்ரோல் பங்க் அருகே, அதே திசையில் வந்த 'டிப்பர் லாரி' மோதியதில், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தலைமறைவானார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, போத்தனுாரை சேர்ந்த டிரைவர் கலைசெல்வனை பிடித்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், ஆசிரியை பணிபுரிந்த நிர்மல மாதா பள்ளிக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவ மாணவியர், சக ஆசிரியைகள் துக்கம் தாளாமல் அழுதனர்.
மாநகரில் கடந்த ஜன., முதல் ஹெல்மெட் மற்றும் 'சீட் பெல்ட்' அணியாமல் சென்ற, 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் நடந்த விபத்துகளில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.