/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கலக்கம், விரக்தி, எரிச்சல், ஏமாற்றத்துடன் ஆசிரியர்கள்'
/
'கலக்கம், விரக்தி, எரிச்சல், ஏமாற்றத்துடன் ஆசிரியர்கள்'
'கலக்கம், விரக்தி, எரிச்சல், ஏமாற்றத்துடன் ஆசிரியர்கள்'
'கலக்கம், விரக்தி, எரிச்சல், ஏமாற்றத்துடன் ஆசிரியர்கள்'
ADDED : பிப் 22, 2025 08:08 AM

திருப்பூர்; தி.மு.க., அரசு, தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள போராட்டங்களுக்கு, தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி அறிக்கை:தி.மு.க., அரசு, 2021 தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும், எங்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்பர்.சொன்னதை செய்யும் திராவிட மாடல் அரசு என நம்பிக்கை தந்துள்ள தி.மு.க., அரசு, காலம் தாழ்த்தாமல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, 9 மாதத்தில் அறிக்கை தர, தமிழக அரசு, மூவர் குழு அமைத்திருப்பது, அரசு ஊழியர்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல்.
ஆட்சிக்கு வந்து நான்காண்டாகியும், அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல், ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வீதியில் இறங்கி போராட வைப்பது, நியாயமல்ல.
எனவே, ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி, முதல்வர் நல்ல முடிவெடுக்க வேண்டும்.
அரசின் செயல்பாடுகள் மீது கலக்கம், விரக்தி, எரிச்சல், ஏமாற்றம், கோபம் ஆகியவை மேலோங்கியுள்ளது. இதை போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

