/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை :தீவிரம் காட்டும் ஆசிரியர்கள்
/
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை :தீவிரம் காட்டும் ஆசிரியர்கள்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை :தீவிரம் காட்டும் ஆசிரியர்கள்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை :தீவிரம் காட்டும் ஆசிரியர்கள்
ADDED : மே 28, 2024 11:22 PM
பொள்ளாச்சி;அங்கன்வாடிகளில் படித்த மாணவர்களைக் கண்டறிந்து, அரசுப் பள்ளிகளில் சேர்க்க, ஆசிரியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி, நகராட்சிப் பள்ளி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில், 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தவிர, பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில், அனைத்து 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 'அப்டேட்' செய்யப்படும் தொடக்க கல்வி பதிவேட்டில் ஐந்து வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் படித்து உரிய வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர். தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் விபரமும் சேகரம் செய்யப்படுகிறது,' என்றனர்.