/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காகிதத் துறையில் தொழில்நுட்ப கருத்தரங்கு
/
காகிதத் துறையில் தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : ஜூலை 25, 2024 11:27 PM
கோவை : 'இந்திய கூழ் மற்றும் காகிதம் தொழில்நுட்ப சங்க (IPPTA)' தலைவர் பவன், துணை தலைவர் கிருஷ்ணன், பொது செயலாளர் கோயல், நிகழ்ச்சி குழுவின் தலைவர் முரளி, துணை தலைவர் வினோத் ஆகியோர் கூறியதாவது:
காகித தொழில் நிறுவனங்களில், டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக செயல்திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், கோவை நவ இந்தியா ரேடிசன் ப்ளூ ஹோட்டலில், இரண்டு நாள் கருத்தரங்கு, இன்று துவங்குகிறது. கருத்தரங்கை, கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா துவக்கி வைக்கிறார்.
புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், இயந்திரங்கள் வினியோகிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்று, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக காகித துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் போன்ற தலைப்புகளில், ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர். 425க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். கூழ் மற்றும் காகிதத் தொழிலில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறக்கூடிய பல முக்கிய உத்திகள் மற்றும் முயற்சிகள், கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.