/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டேக்வாண்டோ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
/
டேக்வாண்டோ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
ADDED : ஜூன் 03, 2024 01:24 AM

கோவை;டேக்வாண்டோ வீரர் - வீராங்கனையினருக்கான கலர் மற்றும் கருப்பு பெல்ட் தேர்வு, நேற்று நடந்தது.
கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்கம் சார்பில், கோவையில் உள்ள டேக்வாண்டோ வீரர்களுக்கான கலர் பெல்ட், பிளாக் பெல்ட் தேர்வு, நேற்று சலீவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நடந்தது.
இத்தேர்வில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒன்பது கிளப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் கிரேடு அடிப்படையில் வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு உள்ளிட்ட பெல்ட்கள் வழங்கப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.