/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் தொழில்நுட்ப கலாசார விழா
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் தொழில்நுட்ப கலாசார விழா
ADDED : மார் 15, 2025 12:10 AM

சூலுார்; கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சர்வதேச தொழில்நுட்ப கலாசார திருவிழா 'பியஸ்டா 25' துவங்கியது.
கோவை கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், தொழில்நுட்ப கலாச்சார திருவிழா ' பியஸ்டா 25' நேற்று துவங்கியது.
கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி, கல்லுாரி செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் முதல்வர் சரவணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
100க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், பயிற்சி பட்டறைகள் நடந்தன. துறை சார்ந்த வல்லுனர்கள், மாணவர்கள் தகவல்களை பரிமாறி கொண்டனர். உணவு, கைவினை பொருட்கள், ஆடைகள் ஓவியம் வரையும் அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. மேலும், ராணுவ ஆயுத கண்காட்சி, ஜப்பான் நாட்டின் கலை, கலாசாரத்தை விளக்கும் அரங்குகள், வாகன கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நடிகர் பிரேம்ஜி மற்றும் குழுவினர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த சர்வதேச தொழில்நுட்ப கலாசார திருவிழா பலதரப்பட்ட மாணவர்களை ஒன்றிணைத்து, அறிவு, கலை சார்ந்த கருத்துக்களை பரிமாறி கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.