ADDED : ஜூன் 05, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை திருமூர்த்திமலை ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா வரும் 13ம் தேதி மங்கள இசையுடன் துவங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 17ம் தேதி காலை, 9:35 மணிக்கு மேல், 10:00 மணிக்குகள் மூலவர் விமானம், பரிவார விமானங்களுக்கும், மூலவர் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரத ராஜ பெருமாள், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.