/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : மே 24, 2024 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,- உடுமலை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில், துாய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணியில், தனியார் நிறுவனம் வாயிலாக, 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், நிர்ணயித்த தொகையான, ரூ.610 தராமல், 310 மட்டுமே தரப்படுகிறது, பி.எப்., தொகை செலுத்துவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த பணியாளர்கள், நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதித்தன.

