/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் தொழில் முனைவோருக்கு பத்து நாள் புத்தாக்க பயிற்சி நிறைவு
/
வேளாண் தொழில் முனைவோருக்கு பத்து நாள் புத்தாக்க பயிற்சி நிறைவு
வேளாண் தொழில் முனைவோருக்கு பத்து நாள் புத்தாக்க பயிற்சி நிறைவு
வேளாண் தொழில் முனைவோருக்கு பத்து நாள் புத்தாக்க பயிற்சி நிறைவு
ADDED : பிப் 21, 2025 11:54 PM

கோவை; தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ், வேளாண் தொழில் முனைவோர்களுக்கான 10 நாட்கள் புத்தாக்க பயிற்சி முகாம் நிறைவடைந்தது.
தொழில்நுட்ப வணிக காப்பகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், நிதி உதவியோடு வேளாண் தொழில் முனைவோர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டது.
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம், நேற்று நிறைவடைந்தது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 25 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முகாமில், தொழில் முனைவு வளர்ச்சி பேக்கரி மற்றும் உணவு தொழில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள், தொழில்நுட்ப புதுமைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.