/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலையில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்: சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு

ADDED : ஏப் 23, 2024 10:38 PM

தொண்டாமுத்தூர் : பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி, நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள, மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப்.,முதல் மே வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்தாண்டு, கடந்த பிப்.,12ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர்.
இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு முதலே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையில் திரண்டனர்.
வனத்துறையினரின் சோதனைக்கு பின், மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நான்கு சக்கர வாகனங்களை, தண்ணீர் பந்தல் பிரிவிலேயே தடுத்து நிறுத்தியதால், பூண்டி கோவிலுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்பட்டது. வழியெங்கிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.