/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம்
/
அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம்
ADDED : ஜூன் 02, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், ஆகியவற்றை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. பாதுகாத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்டவை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், மேல்நிலை பள்ளிகளுக்கும், லாரிகள் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கார், இருசக்கர வாகனங்களின் வாயிலாக தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். நோட்டு புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளான இம்மாதம் பத்தாம் தேதி வழங்கப்பட உள்ளது.