/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் மாயம்
/
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் மாயம்
ADDED : பிப் 26, 2025 04:09 AM
கோவை; ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் இருந்து,ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துச்சென்றதாக இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்பாணி, 62; ஒப்பணக்கார வீதியில் பிரவீன் குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தை, வாடகைக்கு எடுத்து, எஸ்.சி.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில், ஜவுளிப்பொருட்கள் ஒட்டுமொத்த வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜ்குமார் வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பிரவீன் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில், ராஜ்குமார் வாடகைக்கு இருந்த இடத்தை காலி செய்தார்.
பொருட்களை எடுக்கும் போது, துணிகள், பீரோ, சோபா, டேபிள், வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், பணம் உள்ளிட்ட, ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயமாகியிருந்தன.
சம்பவம் தொடர்பாக, ராஜ்குமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார், பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி விஜயாவதி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

