/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் தம்பி கிளப், கோவை லெஜெண்ட்ஸ் வெற்றி
/
நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் தம்பி கிளப், கோவை லெஜெண்ட்ஸ் வெற்றி
நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் தம்பி கிளப், கோவை லெஜெண்ட்ஸ் வெற்றி
நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் தம்பி கிளப், கோவை லெஜெண்ட்ஸ் வெற்றி
ADDED : மார் 28, 2024 03:31 AM
கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், நான்காம் டிவிஷன் லீக் போட்டியில் தம்பி நினைவு கிரிக்கெட் கிளப் மற்றும் கோவை லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிகள் வெற்றி பெற்றன.
ஸ்ரீ சக்தி கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், தம்பி நினைவு கிரிக்கெட் கிளப் மற்றும் சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த, தம்பி நினைவு அணியின் கிஷோர் (67), கலைவாணன் (38), அருள் குமார் (36), பிரவீன் குமார் (31) ஆகியோர் ஜொலிக்க, 48.2 ஓவர்களில் 234 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய சீஹாக்ஸ் அணி, 43.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு சுருண்டது. அணிக்காக அர்ஜூனை குமரன் (46) ஆறுதல் அளித்தார். தம்பி நினைவு அணியின் திலீபன் 4 விக்கெட், பிரவீன் குமார் 3 விக்கெட் வீழ்த்தினர்.
எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், கோவை லெஜெண்ட்ஸ் மற்றும் அக்சயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
இதில், கோவை லெஜெண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்தது.
அணியின் சதீஷ் குமார் (59), நரசிம்மன் (36), நவீன் (43), சூர்ய பிரசன்னா (30) பொறுப்பாக விளையாடினர். அக்சயா கல்லுாரியின் தில்லை மணி, ஆறு விக்கெட் வீழ்த்தினார்.
அக்சயா கல்லுாரி அணி, 41.4 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியடைந்தது. கோவை லெஜெண்ட்ஸ் அணியின் சதீஷ் குமார், 4 விக்கெட் எடுத்தார்.