ADDED : ஏப் 27, 2024 02:09 AM

ஷாப்பிங் போகும் போதெல்லாம் நம்மையும் துாக்கிட்டு போறாங்க. ஆனா ஒண்ணுமே வாங்கித் தரதில்லைங்கற உங்க செல்லத்தோட மைண்ட் வாய்ஸ், எங்களுக்கு கேட்டுருச்சு. சந்தைக்கு புதுசா வந்த சம்மர் ஐயிட்டங்கள் இதோ:
வெட் மேட்: கொளுத்துற வெயிலுக்கு இந்த வெட் மேட் தான், பெட் லவ்வர்ஸோட, பர்ஸ்ட் சாய்ஸா இருக்கு. காலையில, 11 மணி வாக்குல, இந்த மேட்ட, வாட்டர்ல நனைச்சு, உங்க கேட், பப்பியோட ஸ்லீப்பிங் ஏரியால போட்டுட்டா போதும். சாய்ந்தரம் 4:00 மணி வரைக்கும், ஜம்முனு துாங்கும். இது ஈரத்தை தக்க வச்சிக்கறதால, தண்ணீர் வெளிய லீக் ஆகாதாம். ஆன்லைன்ல, கடைகள்லயும் கிடைக்கறதால, வாங்க மறந்துடாதீங்கோ.
ஐஸ் டாய்ஸ்: வீட்டுல ஏசி இல்ல. இந்த சம்மர் வெயிலுக்கு, என் டாக் ரொம்ப கஷ்டப்படுதுன்னு பீல் பண்றீங்களா. அந்த கவலை இனி வேண்டாம் என்கின்றனர் பெட் ஷாப் ஓனர்ஸ். ப்ரூட் ஸ்லைஸ், குச்சி ஐஸ் சேப்புல ஐஸ் டாய்ஸ் கடைக்கள்ல கிடைக்குது. இதை நைட் ப்ரீசர்ல வச்சிட்டு, அடுத்தநாள் மதிய நேரத்துல, எடுத்து கொடுத்துட்டா போதும். லிக் பண்ணி விளையாடிட்டே இருக்கும். இதோட விலையும் உங்க பட்ஜெட்டுக்குள்ள தானாம்.
நைட் காலர்: டின்னர் முடிச்சிட்டு, உங்க பப்பிக்கூட சின்னதா ஒரு வாக் போறீங்களா? அப்போ மறக்காம, இந்த நைட் காலர் வாங்கிடுங்க. இதுல, கிளிட்டர் இருக்கறதால, திடீர்னு, உங்க பப்பி ரோட்டை கிராஸ் பண்ணாலும், வெளிச்சத்துல மின்னும். குறிப்பா, பிளாக் கலர் பெட்ஸ்க்கு, இந்த நைட் காலர் ரொம்பவே யூஸ் புல்லா இருக்குமாம். வித்தியாசமான கலர்ஸ்ல கிடைக்கறதால, உடனே ஆர்டர் பண்ணிடுங்க.

