/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில் குழந்தைகளுக்கான 15வது தடகளப்போட்டி
/
யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில் குழந்தைகளுக்கான 15வது தடகளப்போட்டி
யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில் குழந்தைகளுக்கான 15வது தடகளப்போட்டி
யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில் குழந்தைகளுக்கான 15வது தடகளப்போட்டி
ADDED : ஜூலை 15, 2024 01:10 AM

கோவை,:கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள டி.கே.எஸ்., பள்ளி விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளுக்கான, 15வதுஆண்டு தடகளப் போட்டி யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ், 2024 சார்பாக நடத்தப்பட்டது.
விளையாட்டு போட்டியை, லோட்டஸ் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் சந்தோஷி ராஜேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார். குழந்தைகள், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போட்டிகளில் பங்கேற்றனர்.
கவுரவ விருந்தினராக பங்கேற்ற, டி.கே.எஸ்., மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஜாதா, டி.ஆர்.ஏ. மேல்நிலைப்பள்ளியின் பானுமதி, கவுமாரமடாலயம் மேலாளர் ராமானந்தன், பீமா நகைக்கடை கிளை பொறுப்பாளர் சதீஷ் குமார், பீமா கோல்டு மார்க்கெட்டிங் நிர்வாகி பாலா பிரசாத் ஆகியோர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற, ரூபி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி முதல்வர் கற்பக ஜோதி, ஸ்ரீ கோபால்நாயுடு பள்ளி (நர்சரி & பிரைமரி) தலைமையாசிரியர் வித்யா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
அதிக பதக்கங்களை வென்ற, கோபால் நாயுடு பள்ளி மாணவர்களுக்கு, சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற, 1500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை, பாரா த்ரோபால் பெடரேஷன் ஆப் இந்தியா இயக்குனர், யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் டாக்டர் ஆல்பர்ட் பிரேம்குமார், இயற்பியல் இயக்குனர் டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளி தினேஷ் குமார், உடற்கல்வி ஆசிரியர் சி.எம்.எஸ்., பள்ளி ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.