/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அப்துல் கலாம் கோப்பைக்கான வாலிபால் போட்டி அபாரம்
/
அப்துல் கலாம் கோப்பைக்கான வாலிபால் போட்டி அபாரம்
ADDED : ஆக 12, 2024 10:56 PM

கோவை;டாக்டர் அப்துல் கலாம் நினைவு கோப்பைக்கான, வாலிபால் போட்டி நடைபெற்றது.
டாக்டர் அப்துல் கலாம் நினைவு விளையாட்டுக் குழு அக்னி சிறகுகள் அறக்கட்டளை மற்றும் கோவை மாவட்ட வாலிபால் கழகம் இணைந்து, 9ம் ஆண்டு வாலிபால் போட்டியை நடத்தியது.
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் அப்துல் கலாம் நினைவு கோப்பைக்கான இந்த போட்டியில், 16 ஆண்கள் அணியும், 21 பெண்கள் அணியும் பங்கேற்றன.
கோவை நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே அமைந்துள்ள, மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ஆண்கள் பிரிவில், எஸ்.டி.ஏ.டி., முதல் இடத்தையும், காந்திமாநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாவது இடத்தையும், என்.ஜி.என்.ஜி., பொள்ளாச்சி அணி மூன்றாவது இடத்தையும், லியா ஸ்போர்ட்ஸ் கிளப் நான்காவது இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவில் நிர்மலா கல்லுாரி முதல் இடத்தையும், வெள்ளக்கோவில் அணி இரண்டாவது இடத்தையும், மாநகர போலீஸ் அணி மூன்றாவது இடத்தையும், லியோ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காவது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு, நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.