/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வியாண்டு துவங்க போகுது; துாய்மைப் பணிக்கு ஆயத்தம்
/
கல்வியாண்டு துவங்க போகுது; துாய்மைப் பணிக்கு ஆயத்தம்
கல்வியாண்டு துவங்க போகுது; துாய்மைப் பணிக்கு ஆயத்தம்
கல்வியாண்டு துவங்க போகுது; துாய்மைப் பணிக்கு ஆயத்தம்
ADDED : மே 21, 2024 11:39 PM
பொள்ளாச்சி;பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2024--25ம் கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில், பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை, பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், துாய்மைப் பணி மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கும், ஆனைமலை ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அந்தந்த உள்ளாட்சி அமைப்பு துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு, சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, பருவமழை துவங்க உள்ளதால், பள்ளிகளில் அமைந்துள்ள மின் சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள், மின் பணியாளர்களைக் கொண்டு சரிபார்க்கப்படும். ஏற்கனவே, பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டடங்களின் உறுதி தன்மை முறையாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

