/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போர் விமானப்படை கண்காட்சி அபாரம்
/
போர் விமானப்படை கண்காட்சி அபாரம்
ADDED : ஆக 01, 2024 01:19 AM

கோவை : நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தேசிய மாணவர் படை மற்றும் விமானப்படை நிர்வாகக் கல்லுாரி ஆகியவை இணைந்து, விமானப்படை கண்காட்சியை நடத்தியது.
இந்திய விமானப்படையின் விமானங்கள், போர் விமானங்கள் செயல்படும் விதம், இந்த கண்காட்சியில், விரிவாக விளக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் சிறப்பு வாகனங்கள் மாதிரி பலவும் காட்சிப்படுத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்டவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
விமானப்படையின் நிர்வாகக் கல்லுாரியைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிஷேக் சர்மா, இந்திய விமானப்படையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் மற்றும் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான பல்வேறு வகையான தேர்வுமுறைகள் குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, ராணுவத்தில் சேர இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.