/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1 லட்சம் அடங்கிய சூட்கேஸ் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
/
ரூ.1 லட்சம் அடங்கிய சூட்கேஸ் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
ரூ.1 லட்சம் அடங்கிய சூட்கேஸ் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
ரூ.1 லட்சம் அடங்கிய சூட்கேஸ் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
ADDED : ஆக 01, 2024 01:41 AM

கோவை : ஆட்டோவில், பயணி விட்டுச் சென்ற ரூ.1 லட்சம் பணத்துடன் கூடிய சூட்கேஸை ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை வேடபட்டியை சேர்ந்தவர் சசிகுமார், 39; ஆட்டோ டிரைவர். கடந்த, 15 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். நேற்று காலை, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆந்திராவில் இருந்து வந்த பயணி ஒருவர், ஆட்டோவில், எட்டிமடையில் உள்ள தனியார் கல்லுாரியில் பயிலும், தனது மகனை சந்திக்க சென்றார். ஆட்டோவை விட்டு இறங்கிய பின் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
சசிகுமார் பாதி துாரம் வந்த பின், ஆட்டோவின் பின்பகுதியில் சூட்கேஸ் ஒன்று இருப்பதை கண்டார். இதையடுத்து, மீண்டும் பயணி இறங்கிய இடத்துக்கு சென்று, அவரிடம் சூட்கேஸை ஒப்படைத்தார்.
சசிகுமார் கூறுகையில், ''ஆட்டோவில் பாதி துாரம் வந்த பின்னரே, பயணி உடமையை விட்டுச் சென்றது தெரிந்தது. அதை மீண்டும் ஒப்படைக்க சென்றேன். நான் சூட்கேஸை கொடுத்ததும் அவர்கள் நிம்மதி அடைந்தனர். ஆந்திராவில் இருந்து வந்த அவர், கல்லுாரியில் படிக்கும் மகனின் கல்லுாரி கட்டணத்தை செலுத்த கோவை வந்ததாகவும், சூட்கேஸில் ரூ.1 லட்சம் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்,'' என்றார்.