/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு சிறுவர்களின் சடலம் குட்டையில் இருந்து மீட்பு
/
இரு சிறுவர்களின் சடலம் குட்டையில் இருந்து மீட்பு
ADDED : மே 30, 2024 08:50 PM

பொள்ளாச்சி,:திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே பண்ணைக்கிணறு பகுதியை சேர்ந்த ராமசந்திரன் மகன் மிதுன்ராஜ், 11, அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் வினோத், 12. பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த இருவரும், கடந்த 28ம் தேதி, விளையாடச செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, வீட்டில் இருந்து வெளியேறினர்.
நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த மிதுன்ராஜின் தாய் தெய்வநாயகி, குடிமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இரு சிறுவர்களையும் தேடினர்.
நேற்று, கோமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குட்டை ஒன்றில், இரு சிறுவர்கள் சடலமாக கிடப்பதாக, கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிறார்களின் இறப்பு குறித்து, வீட்டில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள குட்டைக்கு சிறுவர்கள் எப்படி சென்றனர் என்பது குறித்தும், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.