/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதிய பஸ்
/
மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதிய பஸ்
ADDED : மார் 24, 2024 11:52 PM

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டியில் அரசு டவுன் பஸ் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கண்டக்டர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
அவிநாசியில் இருந்து அன்னூர் நோக்கி நேற்று காலை அரசு டவுன் பஸ் எண் ஏ 11 வந்தது. பஸ்சில், 60 பயணிகள் இருந்தனர். 8:15 மணிக்கு, கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகே வந்தபோது, முன்னாள் சென்ற கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
காரின் மீது மோதாமல் இருக்க, டவுன் பஸ் டிரைவர் சின்னசாமி, 46, பஸ்சை வலது புறமாக திருப்பினார்.
அப்போது, நிலை தடுமாறிய பஸ் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கண்டக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு பெண் பயணி காயமடைந்தனர். மற்ற பயணிகளுக்கு எந்த காயமும் இல்லை.
சம்பவ இடத்துக்கு சென்ற கருமத்தம்பட்டி போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, பஸ்சை கிரேன் மூலம் அகற்றினர்.

