/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தி சென்னை சில்க்ஸ்' ஆடை கண்காட்சி
/
'தி சென்னை சில்க்ஸ்' ஆடை கண்காட்சி
ADDED : ஆக 14, 2024 08:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தி சென்னை சில்க்ஸின் ஆடி தள்ளுபடி மற்றும் ஆவணி சிறப்பு ஆடை ரகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தொண்டாமுத்துாரில் நேற்று துவங்கியது.
ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்து வரும் கண்காட்சியை, செங்குந்தர் சங்க தலைவர் செல்வம், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆறுச்சாமி மற்றும் பேரூராட்சி துணை தலைவர் மலர்விழி ஆகியோர் திறந்து வைத்தனர். முதல் விற்பனையை கவுன்சிலர் காந்திமதி, நாகமாலா, பார்த்திபன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஆடி விற்பனைக்காக, புத்தம் புதிய ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணி மாத முகூர்த்த ஸ்பெஷல் கலெக் ஷன் உள்ளதாகவும், தி சென்னை சிலக்ஸ் மேலாளர் தெரிவித்தார்.