ADDED : செப் 09, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நாளை துவங்குகின்றன.
ஆண்டுதோறும் மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழக முதல்வர் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும்.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என, பல்வேறு பிரிவினர் பங்கேற்பர்.
நடப்பாண்டு நடத்தப்பட உள்ள போட்டிகளில், பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.