/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி அக்., இறுதிக்குள் முடிக்க திட்டம்
/
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி அக்., இறுதிக்குள் முடிக்க திட்டம்
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி அக்., இறுதிக்குள் முடிக்க திட்டம்
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி அக்., இறுதிக்குள் முடிக்க திட்டம்
ADDED : செப் 08, 2024 11:29 PM
பொள்ளாச்சி;திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து, கேரளா மாநிலம் கொச்சின் சென்றடைய திருப்பூர், பல்லடம் மற்றும் பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் சாலையும் பிரதான வழித்தடமாக உள்ளது.
தற்போது, பெரும்பாலான வாகனங்கள் இவ்வழித்தடத்திலே இயக்கப்படுகின்றன. அவ்வகையில், பொள்ளாச்சி- பல்லடம் இடையே காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, காட்டம்பட்டி, ஜக்கார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நான்கு வழிச்சாலை அமைக்க விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைத்துறை பொள்ளாச்சி கோட்டம் வாயிலாக, இதற்கான பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், கோட்டப் பொறியாளர் சரவணசெல்வம், விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார்.
உதவிப் பொறியாளர் அறிவழகன், சாலை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பருவமழைக்கு முன்னதாக அக்., மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகமாக உள்ள நிலையில், தயாரிப்பு பொருட்கள் பெரும்பாலும், இச்சாலை வழியாக கொச்சின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.