/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலாங்குளத்தில் படர்ந்த ஆகாய தாமரை அகற்றும் பணியை துவங்கியது மாநகராட்சி
/
வாலாங்குளத்தில் படர்ந்த ஆகாய தாமரை அகற்றும் பணியை துவங்கியது மாநகராட்சி
வாலாங்குளத்தில் படர்ந்த ஆகாய தாமரை அகற்றும் பணியை துவங்கியது மாநகராட்சி
வாலாங்குளத்தில் படர்ந்த ஆகாய தாமரை அகற்றும் பணியை துவங்கியது மாநகராட்சி
ADDED : மார் 13, 2025 06:14 AM

கோவை; வாலாங்குளத்தில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றும் பணியில், மாநகராட்சி இறங்கியுள்ள நிலையில், இதர குளங்களிலும் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பூங்காக்கள், நடைபாதை, படகு நிலையம் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், வாலாங்குளம் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் அழகூட்டப்பட்டது. தற்போது ஆகாய தாமரையின் பிடியில் சிக்கி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாநகரில் பெய்யும் மழை, அரசு மருத்துவமனை கழிவுநீர் பெரும்பாலும் வாலாங்குளத்தையே வந்தடைகிறது.
இக்குளத்தில் படகு இல்லமும் அமைக்கப்பட்டு, படகு சவாரி விடுவதற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், குளம் முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், படகு பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படம், 'மக்கள் பணம் விரயம்' என்ற தலைப்பில், நேற்று நமது நாளிதழில் வெளியானது. இதையடுத்து, நேற்று வாலாங்குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை, அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.
இது போல், ஆகாய தாமரையின் பிடியில் சிக்கியுள்ள, பிற குளங்களையும் ஆகாயத்தாமரையின் பிடியில் இருந்து மீட்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.