sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிக்கு 'கட்' அடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்க மாநகராட்சி முடிவு

/

பள்ளிக்கு 'கட்' அடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்க மாநகராட்சி முடிவு

பள்ளிக்கு 'கட்' அடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்க மாநகராட்சி முடிவு

பள்ளிக்கு 'கட்' அடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்க மாநகராட்சி முடிவு


ADDED : மார் 29, 2024 12:38 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பள்ளிகளுக்கு வராது 'டிமிக்கி' தரும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 83 தொடக்கப் பள்ளிகள், 11 உயர்நிலை, 37 நடுநிலை, 17 மேல்நிலை என, 148 பள்ளிகள் உள்ளன. மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வித்தரத்தை மேம்படுத்த உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன் பிரதிபலிப்பாக, 2023-24ம் கல்வியாண்டில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாக சேர்க்கை புரிந்தனர்.

மாநகராட்சி பட்ஜெட்டிலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால், மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதேசமயம், பொருளாதாரம், உடல்நிலை போன்ற காரணங்களால் இடைநிற்றல், அடிக்கடி விடுப்பு எடுத்தலும் மாணவர்களிடையே நடக்கிறது.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதில், உடல் நிலை பாதிப்பால் அடிக்கடி மாணவர்கள் விடுப்பு எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிகள் தோறும் மருத்துவ சிறப்பு முகாம் நடத்த சுகாதார பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

தற்போது, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' அதிகரித்துள்ளது. பொது தேர்வு சமயத்தில் நன்கு படிக்காத, தொடர் விடுப்பு எடுக்கும் மாணவர்களை, பள்ளி தலைமையாசியர்கள் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என்ற புலம்பல்களும் எழுகின்றன.

போதை பழக்கத்துக்கு அடிமையாவது, சேர்க்கை சரியில்லாதது போன்ற காரணங்களும், மாணவர்கள் விடுப்புக்கு காரணமாகிறது. இதை தடுத்து நல்வழிப்படுத்த, இரு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறியதாவது:

ஒரு சில காரணங்களால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு வருகை புரிவதில்லை. இதனால், பொது தேர்வு சமயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. படிக்காததால் தேர்வுக்கு 'ஆப்சென்ட்' ஆகின்றனர். எனவே, தொடர்ந்து விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியதும், தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் நியமிக்கப்பட்டு, வீடுகளுக்கு சென்றோ அல்லது பள்ளிகளுக்கு மாணவர், பெற்றோரை அழைத்தோ, கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us