/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி ஆக்கிரமித்த ரிசர்வ் சைட்டில் பெயர் பலகை நிறுவிய மாநகராட்சி
/
பள்ளி ஆக்கிரமித்த ரிசர்வ் சைட்டில் பெயர் பலகை நிறுவிய மாநகராட்சி
பள்ளி ஆக்கிரமித்த ரிசர்வ் சைட்டில் பெயர் பலகை நிறுவிய மாநகராட்சி
பள்ளி ஆக்கிரமித்த ரிசர்வ் சைட்டில் பெயர் பலகை நிறுவிய மாநகராட்சி
ADDED : ஆக 04, 2024 11:00 PM

போத்தனூர் : சுந்தராபுரம் அருகே தனியார் பள்ளி ஆக்கிரமிப்பிலிருந்த, 14 கோடி ரூபாய் மதிப்பிலான ரிசர்வ் சைட் மீட்கப்பட்டது.
சுந்தராபுரம் அருகே மாநகராட்சியின், 94வது வார்டிலுள்ள அஷ்டலட்சுமி நகருக்கான ரிசர்வ் சைட், 117.35 சென்ட் பள்ளி, மைதானத்திற்கு, 1983-ல் ஒதுக்கப்பட்டது. இதனை இவ்விடத்தை ஒட்டி செயல்படும் தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்து, பஸ், சைக்கிள் நிறுத்த ஷெட் அமைத்துள்ளது.
பள்ளி நிர்வாகம் சார்பில், வக்கீல் சுந்தர்ராஜன் கூறுகையில், இவ்விடம், இப்பகுதியில் வீட்டு மனை பிரித்தவர்களால், 1988ல் சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளைக்கு, தானமாக தரப்பட்டது. 2002ல் தற்போது பள்ளியை நடத்தும் லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது, என்றார்.
ஆனால் தக்க ஆதாரங்களுடன் இந்த கருத்தை மறுத்துள்ள, சமூக ஆர்வலர் டேனியல், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நகரமைப்பு அலுவலர் மோகன் அறிவுறுத்தலின்படி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் பள்ளிக்கு சென்ற நகரமைப்பு பிரிவினர், 'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார், 14 கோடி ரூபாயாகும்.