/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காதலுடன் செல்ல முயன்ற மகள்; நடு ரோட்டில் தாய் போராட்டம்
/
காதலுடன் செல்ல முயன்ற மகள்; நடு ரோட்டில் தாய் போராட்டம்
காதலுடன் செல்ல முயன்ற மகள்; நடு ரோட்டில் தாய் போராட்டம்
காதலுடன் செல்ல முயன்ற மகள்; நடு ரோட்டில் தாய் போராட்டம்
ADDED : செப் 06, 2024 03:16 AM

கருமத்தம்பட்டி:காதலுடன் காரில் செல்ல முயன்ற மகளை தடுத்து நிறுத்த, தாய் நடுரோட்டில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின், 22 வயது மகள், கருமத்தம்பட்டி அருகே தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் தனது தாயுடன் ஊருக்கு செல்ல கருமத்தம்பட்டி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்து நின்ற காரில், இளம்பெண் திடீரென ஏறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த தாய், மகளை தடுத்து நிறுத்த முயல, இளம்பெண்ணை காருக்குள் இழுத்துக்கொண்டு, இளைஞர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
மகளின் தலைமுடியை பிடித்தவாறு, தாய், காருக்கு பின்னால் ஓடினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், காரை சுற்றி வளைத்தனர். காரில், இருந்த இளைஞர்கள் ஐந்து பேரையும் கீழே இறங்குமாறு கூறி தகராறு செய்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், தாய், மகள் மற்றும் இளைஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
பெண்ணை காரில் கடத்தி செல்ல முயன்ற இளைஞரும், இளம் பெண்ணும், இரு ஆண்டுகளாக காதலித்து வந்ததும், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது. இளம் பெண்ணிடம் விசாரித்ததில், காதலனுடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து, இளம்பெண்ணை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர்.